பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பழங்களை சாப்பிடும் நாம் பழத்தோலை மட்டும் தூக்கி வீசிவிடுகின்றோம்.சில பழங்களில் தோல் செரிமானப் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் அதை சாப்பிட யாரும் விரும்புவதில்லை.அது மட்டுமின்றி பழத்தின் தோலில் இரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றை சாப்பிட தயங்குகின்றனர்.
இதனாலே பழத் தோலின் நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை.குறிப்பாக மாதுளை தோல் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டிருக்கிறது.மாதுளை பழத்தைவிட அதன் தோலில் தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.மூல நோய்,வாய் துர்நாற்றம்,கேன்சர்,சருமப் பிரச்சனை,இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் மருந்தாக மாதுளை தோல் திகழ்கிறது.
இந்த மாதுளை தோலில் தினமும் டீ செய்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மாதுளை தோல் டீ குடிப்பதால் மேலே சொல்லப்பட்டுள்ள நோய் பாதிப்புகள் அனைத்தும் சீக்கிரம் சரியாகும்.
மாதுளை தோல் ஊட்டச்சத்துக்கள்:
1.இரும்புச்சத்து 2.கால்சியம் 3.பொட்டாசியம் 4.துத்தநாகம் 5.வைட்டமின்கள் 6.நார்ச்சத்து 7.ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் 8.ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
மாதுளை தோல் பானம்:
தேவையான பொருட்கள்:-
1)மாதுளை தோல் – ஒன்று
2)இஞ்சி – ஒரு பீஸ்
3)புதினா இலை – நான்கு
4)தேன் – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை டம்ளர்
செய்முறை விளக்கம்:-
மாதுளை தோலை நன்றாக காயவைத்து பவுடர் பக்குவத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றை டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து மாதுளை தோல் பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.அதன் பிறகு ஒரு பீஸ் இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு இடித்து மாதுளை பானத்தில் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு நான்கு புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அலசி மாதுளை பானத்தில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.இந்த மாதுளை பானத்தை தினமும் பருகி வந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்து போகும்.