தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்.. நீங்கள் இத்தனை பலன்களை அடையலாம்!!

Photo of author

By Divya

தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்.. நீங்கள் இத்தனை பலன்களை அடையலாம்!!

Divya

மருத்துவர்கள் சாப்பிடச் சொல்லும் கனிகளில் ஒன்றாக நெல்லிக்காய் உள்ளது.வைட்டமின் சி என்றால் அது நெல்லிக்காய் தான்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் வேறெதிலும் இல்லை.நெல்லிக்காயில் வைட்டமின் ஏ,நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.நெல்லிக்காய் சாறு குடித்தால் மயிர்க்கால்கள் வலிமை அதிகரிக்கும்.நெல்லியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.வைட்டமின் ஏ சத்து கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.குடல் கழிவுகளை அகற்ற செரிமான சக்தியை அதிகரிக்க ஜெல்லிகை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

நெல்லி ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதன் சதை பற்றை மட்டும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மிக்சர் ஜாரில் இந்த நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்தால் நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.டீ,காபிக்கு பதில் தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.