காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

Photo of author

By Divya

காலையில் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் குடுச்சிட்டு வந்தால்.. சர்க்கரை முதல் கேன்சர் வரையிலான கொடிய நோய்கள் குணமாகும்!!

Divya

நாம் உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்று இரு வகைகள் இருக்கின்றது.இந்த வெங்காயம் இயற்கையாக குளிர்ச்சி தன்மை நிறைந்தவையாகும்.வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே பல நோய்கள் குணமாகும்.பச்சை வெங்காயத்தை சாப்பிட விரும்பாதவர்கள் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஜூஸாக அரைத்து பருகலாம்.

வெங்காய ஜூஸ் முக்கிய நோய் பாதிப்புகளை குணமாக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.வெங்காயத்தில் தாதுக்கள்,வைட்டமின்கள்,புரதம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

வெங்காயம் சாப்பிட்டால் வாயில் ஒருவித வாடை வரும்தான்.இருப்பினும் அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்க நாம் சாப்பிட்டுதான் ஆக வேண்டும்.வெங்கயம் சாப்பிட்ட பிறகு புதினா,துளசி போன்ற இலைகளை வாயில் மென்று சாப்பிட்டால் வெங்காய வாடை வராது.சரி இப்பொழுது வெங்காயச் சாறு குடிப்பதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வோம்.

நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்சர் ஜாரில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டினால் வெங்காய ஜூஸ் ரெடி.இந்த வெங்காய ஜூஸின் முழு பலனும் கிடைக்க அதை காலை நேரத்தில் தான் குடிக்க வேண்டும்.

வெங்காய ஜூஸ் குடிப்பதால் சிறுநீரக பிரச்சனை,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் என்று எளிதில் குணமாகாத நோய்களும் சீக்கிரமாகவே குணமாகும்.வெங்காயத்தை அரைத்து திரவமாக எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.வெங்காய ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.வெங்காயத்தில் கால்சியம் அதிகமாக இருக்கின்றது.இந்த வெங்காயத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடல் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் நிறைந்திருக்கும் வெங்காயத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை வெங்காயச் சாறு செய்து குடிப்பதால் குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் வெங்காய ஜூஸ் குடித்தால் சுவாசம் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.கண் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் வெங்காய ஜூஸ் குடிப்பதால் குணமாகும்.பல் ஆரோக்கியம் மேம்பட வெங்காய ஜூஸ் செய்து குடிக்கலாம்.

வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிய வெங்காய ஜூஸ் குடிக்கலாம்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட,புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க தினமும் ஒரு கிளாஸ் வெங்காய ஜூஸ் செய்து குடிக்கலாம்.