இந்த கஷாயம் ஒரு கிளாஸ் குடித்தால்.. கிட்னியில் ஒரு கல் கூட இருக்காது!!

Photo of author

By Divya

இந்த கஷாயம் ஒரு கிளாஸ் குடித்தால்.. கிட்னியில் ஒரு கல் கூட இருக்காது!!

Divya

தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது.இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம் ஏற்படும்.சிறுநீரக கற்களை கரைக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:-

சிறுநீர் வெளியேற்றும் போது வலி எரிச்சல் உணர்வு

அடிவயிற்று வலி

இடுப்பு பகுதியில் இழுத்து பிடித்தல்

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)மூக்கிரட்டை கீரை – ஒரு கப்
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

மூக்கிரட்டை கீரையை ஒரு கைப்பிடி அளவு பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் மூக்கிரட்டை கீரையை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

மூக்கிரட்டை கீரை பானம் இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு அரை தேக்கரண்டி சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.இதனை கிண்ணத்திற்கு வடிகட்டி பருகினால் கிட்னி கற்கள் கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் இதை போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.

வெந்தய கீரை பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த பானத்தை வடித்து சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் கிட்னி கற்கள் கரையும்.