இதை ஒரு கிளாஸ் குடித்தால்.. ஒரு மணி நேரத்தில் மாதவிடாய் உதிரப்போக்கு நின்றுவிடும்!!

Photo of author

By Divya

இதை ஒரு கிளாஸ் குடித்தால்.. ஒரு மணி நேரத்தில் மாதவிடாய் உதிரப்போக்கு நின்றுவிடும்!!

வயது வந்த பெண்கள் சந்திக்க கூடிய பாதிப்புகளில் ஒன்று அதிகளவு உதிரப்போக்கு.ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும் பொழுது அதிக இரத்தப்போக்கு ஏற்படும்.இவ்வாறு மாதவிடாயின் போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு,அசௌகர்ய சூழல் ஏற்படும்.இந்த பாதிப்பை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றினால் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பூ
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீர் போடவும்.பிறகு இதை நன்கு அலசி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் மாதவிடாய் உதிரப்போக்கு நிற்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நெய்
2)கடுகு
3)சின்ன வெங்காயம்

செய்முறை:-

முதலில் 5 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சுத்தமான பசுநெய் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும்.இதை 2 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த தாளிப்பை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அதிகப்படியான உதிரப்போக்கு ஒரு மணி நேரத்தில் நின்றுவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதம்பட்டை பொடி
2)மாதுளை தோல்
3)அதிமதுரப் பொடி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு மாதுளை பழத்தின் தோலை போடவும்.அதன் பின்னர் அரை தேக்கரண்டி மருதம்பட்டை பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி அதிமதுரப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் அதிக உதிரப்போக்கு குணமாகும்.