இதை ஒரு ஸ்பூன் குடித்தால்.. ஓவர் நைட்டில் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

Photo of author

By Vijay

நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் உடல் ஓய்வு அவசியமான ஒன்றாகும். தூங்குவதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வு கிடைக்கிறது. ஆனால் இப்படி தூங்கும் போது குறட்டை வந்தால் அது குறட்டை விடுபவர்களுக்கு பக்கத்தில் உறங்குபவர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சிலர் சத்தமாக குறட்டை விட்டு தூங்குவார்கள். இதனால் அவரது துணை நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்க நேரிடுகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலைக்கு போய்விடுகிறது. குறட்டை அனைவரும் ஏற்படுவதால் அது சாதாரண பிரச்சனை என்று கருதிவிட முடியாது. இது உடலில் உள்ள நோய்களுக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. முதலில் சாதாரணமாக தோன்றும் குறட்டை பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்கு பாதமாகவிடும். இந்த குறட்டையை சமாளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் உதவும்.
குறட்டை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வழிகள்:
1)தேன்
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டுவிட்டு படுங்கள்.இப்படி செய்தால் குறட்டை விடுவதில் இருந்து விடுதலை கிடைக்கும்.
2)ஏலக்காய்
குறட்டைக்கு சிறந்த தீர்வு ஏலக்காய். இதில் இருக்கின்ற விதைகளை இடித்து ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டால் குறட்டை பிரச்சனை நீங்கும்.
3)நெய்
இரவு தூங்குவதற்கு முன்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்துவிட்டு படுக்கவும். இப்படி செய்து வந்தால் குறட்டைக்கு தீர்வு கிடைக்கும். அதேபோல் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேனை மிக்ஸ் செய்து சாப்பிட்டால் குறட்டை விடுவது குறையும்.