யூரினை கழிக்காமல் அடக்கி வைக்கிறீர்களா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை வரும்!!
உடலில் தேங்கியிருக்கின்ற கழிவுகள் சிறுநீர் பாதையின் வழியாக வெளியேறி வருகிறது.தினமும் சிறுநீர் கழிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.ஆனால் சில நேரங்களில் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கி வைக்கும் நிலை ஏற்படும்.
நீண்ட நேர பயணத்தின் போது,புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது சிறுநீர் வந்தால் அதை கழிப்பதற்கான வசதி இல்லாதபோது அடக்கி வைக்கும் நிலை உருவாகும்.சிலரால் யூரினை கட்டுப்படுத்த முடியாமல் வயிறு வீங்கி வலி ஏற்படும்.இது மிருந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.சஇவ்வாறு சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்.
அடிக்கடி சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்து வந்தீர்கள் என்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.எனவே உடலிற்கு தேவையான தண்ணீரை அருந்தி உரிய நேரத்தில் சிறுநீரை வெளியேற்றுவது அவசியமான ஒன்றாகும்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தால் சிறுநீர் பாதையில் தொற்று உருவாகத் தொடங்கிவிடும்.சிலருக்கு நீண்ட நேரம் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் சிறுநீர் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதினால் இடுப்புத் தள தசைகள் பலவீனமாகிவிடும்.சிலரால் சில மணி நேரம் மட்டுமே சிறுநீரை அடக்கி வைக்க முடியும்.வயதானவர்கள்,நீரிழிவு நோயாளிகளால் சிறுநீரை அடக்க முடியாமல் தங்களை அறியாமலேயே வெளியேறிவிடும்.இதனால் அவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை உருவாகும்.எனவே சிறுநீர் வந்தால் அதை அடக்கி ,வைக்காமல் உடனடியாக வெளியேற்றிவிடுவது நல்லது.