இந்த 7 மூலிகைகள் கொண்ட பானம் அருந்தினால்.. ஒரே மாதத்தில் இடுப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மொத்த கொழுப்பும் கரைந்து வெளியேறும்!!

Photo of author

By Rupa

இந்த 7 மூலிகைகள் கொண்ட பானம் அருந்தினால்.. ஒரே மாதத்தில் இடுப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மொத்த கொழுப்பும் கரைந்து வெளியேறும்!!

இன்று உடல் பருமன் கொண்ட மனிதர்களுக்கு தான் பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.மாரடைப்பு,நீரிழிவு நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன்.ஒரு சிலருக்கு இயற்கையாகவே உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை இருக்கும்.சிலருக்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியான ஒன்றாகும்.ஆனால் இன்று உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில்லை பெரும்பாலானோருக்கு அக்கறை இல்லை.இதனால் முதுமையில் வரக் கூடிய நோய்கள் இளம் வயதில் உண்டாகி விடுகிறது.

எனவே உடல் எடையை சிரமமின்றி கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானத்தை அருந்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி பூ இதழ்
2)ஆவாரம் பூ
3)முருங்கை இலை
4)பெரு நெல்லிக்காய்
5)அருகம்புல்
6)பட்டை
7)கிராம்பு

செய்முறை:-

முதலில் 20 செம்பருத்தி பூவின் இதழ்களை தனியாக பிரித்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் 1/2 கப் ஆவாரம் பூ,1/2 கப் முருங்கை இலை,1/4 கப் பெரு நெல்லி துண்டுகள்,1/2 கப் அருகம்புல்லை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும்,

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ஒரு துண்டு பட்டை மற்றும் இரண்டு கிராம்பு போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து காய வைத்த பொருட்களை அதில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.

பின்னர் வறுத்த பட்டை மற்றும் கிராம்பை அதில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த பொடியை ஏற்கனவே அரைத்த பொடியில் போட்டு நன்கு கலந்து விடவும்.இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த மூலிகை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் பொழுது குடிக்க வேண்டும்.தொடர்ந்து 30 தினங்கள் குடித்து வந்தால் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.