இந்த கசாயத்தை குடித்தால் பின்பக்க மண்டை வலி நொடியில் பறந்து விடும்!! உடனே ட்ரை பண்ணி பாருங்க!!

Photo of author

By Divya

இந்த கசாயத்தை குடித்தால் பின்பக்க மண்டை வலி நொடியில் பறந்து விடும்!! உடனே ட்ரை பண்ணி பாருங்க!!

இன்றைய மோசமான வாழக்கை முறையால் மன அழுத்தம்,தலைவலி,உடல் நல பாதிப்புகளை சந்தித்து வருகின்றோம்.குறிப்பாக பின் பக்க மண்டை வலி வந்து விட்டால் அவை கடுமையான தொந்தரவுகளை உண்டு செய்யும்.

தலையில் ஏதோ ஒன்று அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.தலைக்குள் மின்சாரம் செலுத்தியது போன்று கடுமையான வலி ஏற்படும்.இந்த பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)நார்த்தங்காய் இலை – இரண்டு
2)மஞ்சணத்தி காய் – இரண்டு
3)பூண்டு – 4 பற்கள்
4)சோம்பு – 1/4 தேக்கரண்டி
5)பனைவெல்லம் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் இரண்டு நார்த்தங்காய் இலையை கிள்ளி போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 2 மஞ்சணத்தி காயை இடித்து சேர்க்கவும்.பின்னர் 4 பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து அந்த பாத்திரத்தில் சேர்க்கவும்.

இதனுடன் 1/4 தேக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 5 நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க விடவும்.ஒரு கப் நீர் சுண்டி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிறகு இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் பின் மண்டை வலி குணமாகவும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)கருப்பட்டி – தேவையான அளவு
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)சுக்கு – ஒரு துண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு துண்டு சுக்கை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இடித்து வைத்துள்ள கொத்தமல்லி,சுக்கை சேர்த்து கொதிக்க விடவும்.

அதன் பின்னர் சுவைக்காக சிறிது கருப்பட்டி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தி வந்தால் பின்மண்டை வலி குணமாகும்.