முடி உதிர்வை தடுக்க தேங்காய் எண்ணையில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்!
ஆண், பெண் அனைவருக்கும் தலை முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. 40 வயதை கடந்தவர்கள் முடி உதிர்வு பாதிப்பை சந்தித்து வந்த நிலை மாறி.. இன்று இளம் வயதினரை அதிகளவு பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்து விட்டது.
முடி உதிர்வை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு, நிம்மதியான தூக்கம், தலை முடிகளுக்கு தனி அக்கறை செலுத்த வேண்டும்.
முடி உதிர்வை கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணையில் சில பொருட்களை பயன்படுத்தி தலைக்கு தேய்த்து வாருங்கள்.
1)தேங்காய் எண்ணெய்
2)வெந்தயம்
3)இலவங்கம்
ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி இலவங்கத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
1)விளக்கெண்ணெய்
2)வெந்தயம்
3)கறிவேப்பிலை
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வறுத்து ஆறவிடவும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நன்கு பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.