உடலில் படியும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் மூலிகை பானம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.இந்த பானத்தை தொடர்ந்து காலை நேரத்தில் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)வெது வெதுப்பான – ஒரு கிளாஸ்
செய்முறை:-
*முதலில் பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இருந்து சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
*பிறகு மிக்சர் ஜாரில் நெல்லிக்காய் துண்டுகளை போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
*அடுத்து பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
*பிறகு அரைத்த நெல்லிக்காய் சாறை அதில் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
*பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.
இந்த பானத்தை தொடர்ந்து 21 நாட்கள் பருகி வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
2)சியா விதை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை:-
*ஒரு கிண்ணத்தில் ஆளி விதை மற்றும் சியா விதையை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.
*பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து ஊறவைத்துள்ள ஆளிவிதை மற்றும் சியா விதையை அதில் போட்டு சிறிது கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)இலவங்கப்பட்டை பொடி – அரை தேக்கரண்டி
2)இஞ்சிப் பொடி – அரை தேக்கரண்டி
செய்முறை:-
*பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரை தேக்கரண்டி இலவங்கபட்டை பொடி மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சிப் பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
*பிறகு இதை வடிகட்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.