தற்போதைய காலகட்டத்தில் என்னதான் டாய்லெட்டில் உட்கார்ந்து முக்கினாலும் மலம் மட்டும் வெளியேற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது என்பது பலரின் வேதனையாக இருக்கின்றது.இப்படி அடிக்கடி மலச்சிக்கலை சந்திக்க காரணம் நாம் உட்கொள்ளும் உணவுமுறை பழக்கம் தான்.
செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள்,நார்ச்சத்து மிகவும் குறைவாக உள்ள உணவுகள்,போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல்,மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை உருவெடுக்கிறது.
மலச்சிக்கலால் அவதியடைந்து வருபவர்கள் மாத்திரையை உட்கொண்டால் அவை தற்காலிக தீர்வை மட்டுமே தரும்.நிரந்தர தீர்வு கிடைக்க கசகசாவை தேங்காய் பாலில் கலந்து கொதிக்க வைத்து பருக வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
**கசகசா – ஒரு ஸ்பூன்
**தேங்காய் துண்டு – கால் கப்
**விளக்கெண்ணெய் – மூன்று சொட்டு
தயாரிக்கும் முறை:-
முதலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை வாணலியில் கொட்டி பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி பால் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் பாலை பில்டர் கொண்டு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் இந்த தேங்காய் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.
தேங்காய் பால் கொதிக்கும் தருவாயில் வறுத்து வைத்துள்ள கசகசாவை போட வேண்டும்.தேங்காய் பாலில் கசகசா நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
பிறகு அதில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வயிறு காலியாக இருக்கும் பொழுது பருக வேண்டும்.
இந்த பாலை குடித்த அரை மணி நேரத்தில் மலக் குடலில் அடைத்துக் கொண்டிருந்த கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்.
அடிக்கடி மலச்சிக்கலை சந்திப்பவர்கள் இந்த தேங்காய் பால் செய்து பருகி வந்தால் சிக்கலின்றி மலம் கழிக்கலாம்.