ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் உடல் எடை கூடுகிறது.இன்று ஒருசிலர் மட்டுமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர்.பெரும்பாலானோர் எண்ணெய்,கொழுப்பு உணவுகளை உட்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.
உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:-
**கொலஸ்ட்ரால் உணவுகள்
**சோம்பேறி வாழ்க்கை முறை
**ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்
**ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்
**உடல் நலக் கோளாறு
தேவையான பொருட்கள்:-
1)கேழ்வரகு – இரண்டு தேக்கரண்டி
2)கேரட் – ஒன்று
3)பீன்ஸ் – இரண்டு
4)மிளகு தூள் – கால் தேக்கரண்டி
5)சீர்கத் தூள் – கல் தேக்கரண்டி
6)உப்பு – தேவையான அளவு
7)கொள்ளு பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு கேழ்வரகு எடுத்து கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணியில் இந்த கேழ்வரகை போட்டு முளைக்கட்ட வேண்டும்.
**அதன் பிறகு கேழ்வரகை நன்றாக காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
*அடுத்து ஒரு தேக்கரண்டி கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து கேரட் மற்றும் பீன்ஸை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து அடுப்பில் சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
**அடுத்து நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் பீன்ஸ் துண்டுகளை அதில் போடவும்.விருப்பப்பட்டால் பட்டாணி,ப்ரோக்கலி போன்ற காய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
**அதன் பிறகு கால் தேக்கரண்டி மிளகுத் தூள்,கால் தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
**பிறகு வறுத்து அரைத்த கொள்ளுப்பொடி சேர்த்து மிதமான தீயில் சூப் தயாரித்து ஒன்றரை மாதம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சரசரவென்று குறைந்துவிடும்.