இந்த ஹெர்பல் டீ குடிச்சிட்டு வந்தால் உடல் இரும்பு வலிமை பெறும்!! அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக செயல்படும்!!

Photo of author

By Divya

இந்த ஹெர்பல் டீ குடிச்சிட்டு வந்தால் உடல் இரும்பு வலிமை பெறும்!! அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக செயல்படும்!!

உடலை வலிமையாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் மூலிகை டீ செய்து குடித்து வர வேண்டும்.தேயிலை டீ,காபி போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்து விட்டு இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் முருங்கை மரத்தின் இலை,பூ,பட்டை மற்றும் விதையை பொடியாக்கி அதில் டீ போட்டு குடித்து வந்தால் மருத்துவ செலவை முழுமையாக தவிர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை இலை
2)முருங்கை பூ
3)முருங்கை பட்டை
4)முருங்கை பருப்பு
5)தேன் (அல்லது) கற்கண்டு
6)தண்ணீர்

செய்முறை:-

முருங்கை இலை,முருங்கை பூ,முருங்கை பட்டை மற்றும் முருங்கை பருப்பு ஆகிய 4 பொருட்களையும் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.இவை அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.பொடியாக கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும்.

இல்லையேல் நீங்களே இதை அனைத்தையும் நன்கு உலர்த்தி மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இது தான் ஹெல்தி டீ பவுடர்.இதை வைத்து தான் சுவை மற்றும் ஆரோக்கியமான டீ தயாரிக்க போகிறோம்.

இந்த டீயில் சுவைக்காக வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தூய தேன் அல்லது கற்கண்டு மட்டுமே சேர்க்க வேண்டும்.

ஹெல்தி டீ தயாரிக்கும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.2 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்துள்ள ஹெல்தி டீ பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து விடவும்.இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்ட பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த ஹெல்தி டீயை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கற்கண்டு அல்லது தேன் சேர்த்து கலக்கி பருகவும்.இந்த டீயை தினமும் குடித்து வந்தால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு,எலும்பு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.