டாக்டர் சொன்ன இந்த ஜூஸை 30 நாட்கள் குடித்தால்.. உடலில் ஒரு கொழுப்பு கூட இருக்காது!!

Photo of author

By Divya

டாக்டர் சொன்ன இந்த ஜூஸை 30 நாட்கள் குடித்தால்.. உடலில் ஒரு கொழுப்பு கூட இருக்காது!!

Divya

நமது ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக குவிந்துவிடுகிறது.இதனால் உடல் பருமன் ஏற்பட்டு நோய்கள் உருவாகிவிடுகிறது.எனவே உடலில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து 30 நாட்கள் குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)வெண்பூசணி துண்டுகள் – ஒரு கப்
2)நெல்லிக்காய் – ஒன்று
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் வெண்பூசணி கீற்றின் தோலை நீக்கிவிட வேண்டும்.அடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி கால் தேக்கரண்டி அளவிற்கு மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)சுரைக்காய் துண்டுகள் – ஒரு கப்
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் சுரைக்காய் ஒரு கீற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.சுரைக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு எலுமிச்சையின் சாறை பிழிந்துவிட வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகினால் ஒரு மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.