சர்க்கரை நோய் பாதிப்பு என்பது பலருக்கும் வரும் பெரிய பொதுவான நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோய் வந்தால் நம் உடலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
இனிப்பு உணவை சர்க்கரை நோயாளிகள் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.உடலில் சர்க்கரை அளவு உயர்ந்தவிட்டால் அதை குறைக்க மருந்து மாத்திரை ஒன்றுதான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க நம் பாரம்பரிய மருத்துவத்தை முயற்சி செய்யலாம்.கொத்தமல்லி விதை,சீரகம்,மிளகு,ஓமம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பானம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய பானம்:
தேவையான பொருட்கள்:-
1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)சீரகம் – கால் தேக்கரண்டி
4)ஓமம் – கால் தேக்கரண்டி
5)இந்துப்பு – சிறிதளவு
செய்முறை:-
1.அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை போட்டு வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைக்க வேண்டும்.
2.அடுத்து கால் தேக்கரண்டி மிளகு,கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.
3.இதன் பிறகு மிக்சர் ஜாரை சுத்தம் செய்து வறுத்த கொத்தமல்லி விதை,மிளகு,சீரகம் மற்றும் ஓமத்தை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த கொத்தமல்லி கலவையை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது இந்துப்பு கலந்து குடிக்கலாம்.
காலை நேரத்தில் இந்த பானம் செய்து குடிக்க வேண்டும்.டீ,காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிட்டு இந்த பானத்தை செய்து குடிங்க.சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பானம் நல்ல பலனை கொடுக்கும்.கொத்தமல்லி விதை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மிளகு,சீரகம்,ஒமம் போன்ற பொருட்கள் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும்.இந்த ஆரோக்கிய பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.