இந்த கஞ்சியை குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்!!

Photo of author

By Rupa

ஊட்டச்சத்து நிறைந்த தானிய வகைகளில் இன்று பார்லி.இதில் நார்ச்சத்து,ப்ரோட்டின்,கொழுப்பு,சுண்ணாம்பு,பாஸ்பரஸ்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இந்த பார்லியில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.உடல் பருமன்,இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பவர்கள் பார்லி கஞ்சி செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1)பார்லி அரிசி
2)கல் உப்பு
3)இஞ்சி
4)கறிவேப்பிலை
5)பச்சை மிளகாய்
6)கொத்தமல்லி தழை
7)தயிர்

செய்முறை விளக்கம்:

ஒரு பாத்திரத்தில் 25 கிராம் பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவிடவும்.பிறகு தண்ணீர் வடிகட்டிவிட்டு சிறிது நேரம் உலர விடவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் இந்த பார்லி அரிசியை போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பிறகு அரைத்த பார்லி அரிசியை அதில் கொட்டி கலந்துவிடவும்.பார்லி வேக ஆரம்பித்த உடன் கெட்டியாகிவிடும்.இதனால் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சுடுநீர் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நீரை பார்லி கஞ்சியில் ஊற்றி குறைவான தீயில் கொதிக்கவிடவும்.பிறகு சிறிதளவு கல் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை,ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி,ஒரு பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு ஒரு கப் கெட்டி தயிர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கொதித்துக் கொண்டிருக்கும் பார்லி கஞ்சியை இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.பார்லி கஞ்சி ஆறியதும் அரைத்த தயிர் கலவையை ஊற்றி கலந்து குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.இந்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.