சம்பா கோதுமை ரவையில் கஞ்சி செய்து காலை நேர உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள்,கெட்ட நீர் அனைத்தும் வெளியேறிவிடும்.
உடலில் கெட்ட கொழுப்பு குவிய காரணங்கள்:
**கொழுப்பு உணவுகள்
**ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
**சோம்பல் வாழ்க்கை முறை
**உடல் நலக் கோளாறு
தேவையான பொருட்கள்:-
1)சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
4)நெய் – இரண்டு தேக்கரண்டி
5)கடுகு – ஒரு தேக்கரண்டி
6)வெங்காயம் – ஒன்று
7)பச்சை மிளகாய் – இரண்டு
8)தக்காளி – ஒன்று
9)கேரட் – ஒன்று
10)பீன்ஸ் – ஐந்து
11)மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு
13)பச்சை பட்டாணி – இரண்டு தேக்கரண்டி’
14)உப்பு – தேவையான அளவு
15)தண்ணீர் – 6 கப்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் அடுப்பில் குக்கர் ஒன்றை வைக்க வேண்டும்.அதில் சிறிது நெய் ஊற்றி கோதுமை சம்பா ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு அதே குக்கரில் நெய் ஊற்றி கடலை பருப்பு,சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
2.அதன் பிறகு 6 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் சிறிது கொதித்து வந்ததும் வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறிவிட வேண்டும்.
3.பிறகு குக்கர் மூடிவிட்டு இரண்டு விசில் வரும் வரும் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.விசில் நின்ற பின்னர் ரவையை கிளறிவிட வேண்டும்.
4.அடுத்து கேரட்,பீன்ஸ்,தக்காளி,பச்சை மிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரியவிட வேண்டும்.
5.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.பின்னர் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.
6.அதன் பிறகு உப்பு,மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.அதன் பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள ரவையை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
7.பிறகு வாசனைக்காக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.இந்த சம்பா கோதுமை ரவை கஞ்சியை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.உடல் எடையை வேகமாக குறைக்க நினைப்பவர்கள் இந்த கஞ்சியை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வரலாம்.