ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கத்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து எடை அதிகரித்துவிடுகிறது.குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குவிந்து தொப்பை உருவாகிவிடுகிறது.இந்த கொழுப்பை கரைத்து தள்ள சாமை எனும் சிறு தானியத்தை கொண்டு கஞ்சி செய்து குடிக்கலாம்.
சாமையின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:
**புரதம்
**கால்சியம்
**இரும்பு
**கொழுப்பு அமிலம்
**நார்ச்சத்து
**தயமின்
உடல் எடையை குறைக்கும் சாமை கஞ்சி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)சாமை அரிசி
2)பூண்டு
3)சீரகம்
4)எண்ணெய்
5)கறிவேப்பிலை
6)உப்பு
7)பச்சை மிளகாய்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கப் சாமை அரிசி எடுத்து பாத்திரத்தில் கொட்டி குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை தட்டில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதேபோல் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.
பின்னர் நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து சாமை அரிசியை அதில் கொட்டி கிளற வேண்டும்.
அதற்கு அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.இந்த சாமை கஞ்சி தயார் ஆனதும் அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த சாமை கஞ்சியை குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.சாமையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சாமையின் பிற பயன்கள்:
1.சர்க்கரை நோய் கட்டுப்பட சாமை அரிசி சாப்பிடலாம்.
2.மாதவிடாய் கால பாதிப்புகள் குணமாக சாமை அரிசி உணவு எடுத்துக் கொள்ளலாம்.
3.ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் மேம்பட சாமை அரிசி உணவு எடுத்துக் கொள்ளலாம்.
4.கால்சியம் நிறைந்த சாமையை அடிக்கடி சாப்பிட்டால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.
5.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் சாமை உணவு சாப்பிட்டால் உரிய பலன் கிடைக்கும்.
6.சாமையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
7.சாமை மற்றும் கருப்பு உளுந்து ஆகிய இரண்டையும் வைத்து இட்லி,தோசை செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.