உடலில் இருக்கின்ற ஊளைச்சதை குறைய தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்கள்.நிச்சயம் உங்கள் உடல் எடையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)வெந்தயம் – அரை தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)கற்கண்டு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த தேங்காய் பாலை வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடித்து அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு அரை தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடித்து தேங்காய் பாலில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இனிப்பு சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.தேங்காயை துருவி சாப்பிட்டு வந்தால் அதிக பசி கட்டுப்படும்.தேங்காய் பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து இதனுடன் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள் சேர்த்து பருகினால் உடல் எடை வேகமாக குறையும்.
தேங்காய் பாலில் சிறிது ஓமத் தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)சுக்கு – ஒரு துண்டு
3)ஏலக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஒரு மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி நெருப்பில் போட்டு வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அதேபோல் ஒரு ஏலக்காயை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் இந்த தேங்காய் பாலில் போட்டு குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.