தமிழகம் முழுவதும் தற்பொழுது பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்த மழை காலங்களில் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற தொற்று பாதிப்புகள் பெரும் தொல்லையாக இருக்கிறது.இதுபோன்ற பாதிப்புகள் வராமல் இருக்க நெல்லிக்காயில் ரசம் செய்து சாப்பிடுங்கள்.
நெல்லிக்காய் ரசம் செய்ய தேவையானவை
1) பெரிய நெல்லிக்காய் – மூன்று
2)சீரகம் மிளகு – 1 1/2 தேக்கரண்டி
3)பூண்டு – 4 முதல் 5 பற்கள்
4)பச்சை மிளகாய் – இரண்டு
5)தக்காளி – இரண்டு
6)வரமிளகாய் – ஒன்று
7)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
8)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
9)உப்பு – தேவையான அளவு
10)பெருங்காயம் – சிறிதளவு
11)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
12)கடுகு – 1/4 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் மூன்று பெரிய நெல்லிக்காய் எடுத்து அதன் விதைகளை நீக்கி சதை பற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகள்,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை ஒரு கொத்து,வரமிளகாய்,தக்காளி மற்றும் பூண்டு பற்களை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடுங்கள்.அடுத்து இரண்டு பச்சை மிளகாயை நறுக்கி அதில் போட்டு வதக்குங்கள்.
பிறகு அரைத்த விழுது சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்.இதை தொடர்ந்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
அடுத்து சிறிதளவு பெருங்காயத் தூள் மற்றும் வாசனைக்காக சிறிது கொத்தமல்லி தழை சேர்த்தால் சளி இருமலை போக்கும் நெல்லிக்காய் ரசம் தயார்.இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.அல்லது கிளாஸில் ஊற்றி நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகலாம்.