இந்த கீரை சூப் குடித்தால்.. சாகும் வரை மூட்டு வலி பாதிப்பை சந்திக்கவே மாட்டீங்க!!

Photo of author

By Divya

இந்த கீரை சூப் குடித்தால்.. சாகும் வரை மூட்டு வலி பாதிப்பை சந்திக்கவே மாட்டீங்க!!

Divya

மூட்டு இணைப்பு வலிமையை அதிகரித்தால் மூட்டு வலி,வீக்கம் போன்ற பாதிப்புகளை பார்க்காமல் இருக்கலாம்.ஆகவே மூட்டு வலிமையை அதிகரிக்க முடக்கத்தான் கீரையில் சூப் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)முடக்கத்தான் கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் முடக்கத்தான் கீரையை உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வெயிலில் காயவைத்து பொடி பக்குவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த முடக்கத்தான் கீரை பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் மூட்டு எலும்பு வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முடக்கத்தான் கீரை – கால் கப்
2)சின்ன வெங்காயம் – 10
3)பூண்டு பல் – நான்கு
4)உப்பு – தேவையான அளவு
5)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முடக்கத்தான் கீரையை தண்ணீரில் போட்டு அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு வைத்துள் கொள்ள வேண்டும்.

பிறகு நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து முடக்கத்தான் கீரையை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயத்தை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து பூண்டு பல்லை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு தேவையான அளவு இந்துப்பு போட்டு குடித்து வந்தால் மூட்டு இணைப்பு வலிமையாக இருக்கும்.மூட்டு வலி,மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படமால் இருக்க முடக்கத்தான் கீரையில் சூப் செய்து குடிக்கலாம்.