தினம் ஒரு கொய்யா இலையை சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

தினம் ஒரு கொய்யா இலையை சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Divya

நாம் அனைவரும் வாங்கி சாப்பிடும் மலிவு விலை பழமான கொய்யா ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த கொய்யா பழத்தை போல் கொய்யா இலையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.

கொய்யா இலை ஊட்டச்சத்துக்கள்:-

1)வைட்டமின் சி
2)வைட்டமின் ஏ
3)ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
4)பொட்டாசியம்
5)மாங்கனீசு
6)தாமிரம்
7)போலிக் அமிலம்
8)நார்ச்சத்து
9)புரதம்

கொய்யா இலை பயன்கள்:-

**தினமும் ஒரு கொய்யா இலையை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

**உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க கொய்யா இலை பானம் செய்து பருகலாம்.

**கொய்யா இலையை நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடித்து தலைக்கு பயன்படுத்தி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

**கொய்யா இலை தேநீர் செய்து பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கொய்யா இலை தேநீர் செய்து பருக வேண்டும்.

**பல் வலிமையை அதிகரிக்க கொய்யா இலை தேநீர் செய்து குடித்து வரலாம்.கொய்யா இலையை பொடித்து பல் துலக்கி வந்தால் சொத்தைப்பல் பிரச்சனை சீக்கிரம் குணமாகும்.

**மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு பிரச்சனை உள்ள பெண்கள் கொய்யா இலை தேநீர் செய்து பருகினால் உரிய பலன் கிடைக்கும்.

**கொய்யா இலையில் இருக்கின்ற வைட்டமின் சி சத்துக்கள் முகத்தில் பருக்கள் வருவதை கட்டுப்படுத்த உதவுகிறது.

**இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க கொய்யா இலை பானம் செய்து பருகலாம்.

**கொய்யா இலையை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

**தோல் சுருக்கம் நீங்க கொய்யா இலையில் தேநீர் செய்து பருகுங்கள்.கொய்யா இலையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.