மோசமான உணவை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டு நோய் பாதிப்புகள் உண்டாகிறது.உணவு தவிர்த்தல்,காரமான உணவு,ஆரோக்கியம் இல்லாத உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து வருபவர்களுக்கு வாய் மற்றும் வயிற்றில் புண்கள் உருவாகி மோசமான ஆபத்து ஏற்படும்.இதில் இருந்து மீள மணத்தக்காளி கீரையை உட்கொள்ளலாம்.
தீர்வு 01:
1)மணத்தக்காளி கீரை – ஒரு கையளவு
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இந்த மணத்தக்காளி ஜூஸை வடிகட்டி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் பிரச்சனை நீங்கும்.
தீர்வு 02:
1)மணத்தக்காளி கீரை – ஒரு கப்
2)சின்ன வெங்காயம் – நான்கு
3)தக்காளி – ஒன்று
4)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
5)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
6)உப்பு – தேவையான அளவு
7)கடுகு – கால் தேக்கரண்டி
8)சீரகம் – கால் தேக்கரண்டி
9)தேங்காய் துருவல் – கால் கப்
முதலில் மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு கடுகு,சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.அதன் பிறகு நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.
இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள மணத்தக்காளி கீரையை போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு கால் கப் தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்க வேண்டும்.இந்த மணத்தக்காளி கீரை பொரியலை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,குடல் புண் சீக்கிரம் குணமாகும்.