ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை இப்படி சாப்பிட்டால்.. கால்சியம் சத்து பன்மடங்கு உயரும்!!

Photo of author

By Divya

நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியான ஒன்று தான் கால்சியம் சத்து.உடலில் கால்சியம் சத்து குறைந்தால் முதுகு வலி,இடுப்பு வலி,கை கால் வலி,எலும்பு வலி போன்றவை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.இந்த கால்சியம் பற்றாக்குறை நீங்க கருப்பு எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருப்பு எள் ஊட்டச்சத்துக்கள்:

*கால்சியம்
*மெக்னீசியம்
*பாஸ்பரஸ்
*துத்தநாகம்
*வைட்டமின் பி
*புரதம்
*ஜிங்க்
*வைட்டமின் பி,ஈ

கால்சியம் சத்தை அதிகரிக்கும் எள்ளு பானம் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள் – 100 கிராம்
2)பாதாம் பருப்பு – 100 கிராம்
3)தேன் – 50 மில்லி
4)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் 100 கிராம் அளவிற்கு கருப்பு எள் மற்றும் 100 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இதை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

**பிறகு இதை நிழலில் நாள் முழுவதும் காய வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதிக்கும் சமயத்தில் அரைத்த பாதாம் கருப்பு எள் பொடி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் கால்சியம் குறைபாடு நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

**அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் இதை ஆறவைத்து ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் இந்த கருப்பு எள் பொடியை பாத்திரம் ஒன்றில் கொட்டி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

**கருப்பு எள் பானம் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து பெருக வேண்டும்.