நம் தாத்தா பாட்டி காலத்தில் கருப்பு எள் கொண்டு பல்வேறு உணவுகள்,இனிப்புகள் செய்து உட்கொண்டனர்.ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு எள் என்றால் எப்படி இருக்குமென்று கூட தெரியவில்லை.
பெண்களுக்கு கருப்பு எள் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.எள்ளில் கருப்பு,வெள்ளை என இரு வகைகள் இருக்கின்றது.இதில் கருப்பு எள் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக திகழ்கிறது.கருப்பு எள்ளில் கால்சியம்,பாஸ்பரஸ்,ஜிங்க்,இரும்பு,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
கருப்பு எள்ளில் சிமிலி உருண்டை,லட்டு,எள்ளு மிட்டாய் போன்ற இனிப்பு பண்டங்கள் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருப்பு எள் ஆரோக்கிய பலன்கள்:
1)கால்சியம் சத்து நிறைந்த கருப்பு எள்ளை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வளமையடையும்.
2)இரத்தத்தில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற எள் உணவுகளை உட்கொள்ளலாம்.
3)பெண்களின் சீரற்ற மாதவிடாய் பாதிப்பை சரி செய்ய கருப்பு எள் பானம் உதவியாக இருக்கிறது.மூட்டு வலி,இடுப்பு வலி,கை கால் வலி குணமாக கருப்பு எள்ளு உருண்டை சாப்பிடலாம்.
4)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கருப்பு எள் பானத்தை காலை நேரத்தில் பருகலாம்.
5)வெள்ளை முடியை கருமையாக மாற்ற கருப்பு எள் பானம் பருகலாம்.இரத்தக் குழாய் ஆரோக்கியம் மேம்பட கருப்பு எள் பானம் பருகலாம்.
6)மூளை ஆரோக்கியம் மேம்பட கருப்பு எள் உணவு சாப்பிடலாம்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கருப்பு எள் சாப்பிடலாம்.
7)கருப்பு எள்ளில் இருக்கின்ற நல்ல கொழுப்பு சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
8)இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் கருப்பு எள்ளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.செரிமானப் பிரச்சனை இருபவர்கள் கருப்பு எள்ளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.