இதையெல்லாம் சாப்பிட்டால் கட்டாயம் அடுத்த முறை கர்ப்பம் தான்!! கட்டாயம் இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

இன்றைய இளம் தலைமுறையினரிடையே இயல்பாக கருவுறுதல் குறைந்த வண்ணம் உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏட்படுவதில்லை.

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையை வாழ்பவர்களுக்கே கருவுறுதல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.கருவுறுதல் நடக்க கருமுட்டையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.பெண்கள் கருத்தரிக்க கருமுட்டையின் பங்கு மிக மிக முக்கியமாகும்.சமீப காலமாக பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்தித்து வருகின்றனர்.

நீண்ட நாள் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய சிலர் மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.சிலருக்கு மாத்திரைகளை உட்கொண்டால் மட்டுமே மாதவிடாய் சுழற்சி நிகழும் என்ற நிலை உள்ளது.ஆனால் மாத்திரைகளை உட்கொண்டு செயற்கையான முறையில் மாதவிடாயை வரவழைப்பதால் கருமுட்டையின் தரம் குறைந்துவிடும்.சிலருக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாமல் போய்விடும்.இதனால் அவர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாது.செயற்கையான முறையில் மட்டுமே கருத்தரிக்க இயலும்.

இயற்கையான முறையில் மாதவிடாய் சுழற்சி நடைபெறும் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும்.3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியமான ஒன்று.ஆனால் இன்று பல பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஒரே நாளில் முடிந்துவிடுகிறது.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்.

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பருவமடைந்த பெண்களுக்கு எள்,கருப்பு உளுந்து களி,வெந்தயக் களி உள்ளிவற்றில் நெல்லெண்ணய் கலந்து கொடுக்கும் பழக்கம் உள்ளது.ஆனால் இன்று அப்பழக்கம் மெல்ல மெல்ல குறைந்துவிட்டது.நெல்லெண்ணெய் சேர்த்த கருப்புஉளுந்து களி,கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட இனிப்பு,எள் உருண்டை உள்ளிட்டவற்றை சாப்பிடுவதன் மூலம் கருமுட்டையின் தரத்தை அதிகரிக்க முடியும்.