1 மாதம் சிக்கனை இப்படி சாப்பிட்டால் உங்கள் எடை மளமளவென குறையும்!!

Photo of author

By Rupa

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் பழங்களையே தனது உணவாக எடுத்துக் கொண்டு அசைவ உணவை சாப்பிட விரும்பினாலும் கூட, உடல் எடை அதிகரித்து விடுமோ என பயந்து அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர்.

அத்தகைய அசைவ பிரியர்களுள் நிறைய பேருக்கு தெரியாத ஒன்று சிக்கனை சாப்பிட்டும் உடல் எடையை குறைக்க முடியும் என்பது தான். ஆனால் அத்தகைய சிக்கனை எந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளது. அந்த விதிகளின்படி சிக்கனை சாப்பிட்டால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும்.

அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சிக்கனை எடுத்துக் கொள்ளும் போது சிக்கனில் நெஞ்சுப் பகுதி கறியை சாப்பிடலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில் அப்பகுதியில் தான் புரோட்டின் மிக அதிகமாகவும், கொழுப்பு சத்தும் கலோரிகளும் குறைவாகவும் உள்ளது. எனவே சிக்கனின் நெஞ்சுப் பகுதி கரியை எந்த முறையில் வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம் ஆனால் பொறிக்கும் வகையை தவிர்த்து.

ஏனெனில் அதிக அளவான எண்ணெயை உபயோகித்து சமைக்க கூடாது அதற்கு பதிலாக ஒரு ஸ்பூன் எண்ணெயை மட்டும் பயன்படுத்தி சிக்கன் கிரேவி போன்ற உணவுகளை சமைத்து உண்ணலாம்.
சிக்கனை எண்ணெயில் பொரித்து உண்ண விரும்புவர்களும் அதற்கு பதிலாக கிரில் அல்லது தந்தூரி சிக்கனை சாப்பிடலாம்.

ஏனென்றால் இச்செய்முறையில் அதிக எண்ணெயை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த வகையான உணவையும் நமது வீட்டிலேயே, அதிக மசாலாக்களை உபயோகிக்காமல் சமைத்து சாப்பிடுவதும் நல்லது.