முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால்.. ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து சிக்குன்னு ஆகிடுவீங்க!!

Photo of author

By Divya

முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால்.. ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்து சிக்குன்னு ஆகிடுவீங்க!!

Divya

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய முருங்கை கீரையை கீழ்கண்டவாறு செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முருங்கை கீரையை சுத்தப்படுத்தி வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.இந்த முருங்கை பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

3.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த முருங்கை கீரை பானம் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கொத்து
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஒரு கொத்து முருங்கை கீரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

2.இந்த பானத்தை வடித்து பருகி வந்தால் உடல் எடை சீக்கிரம் குறையும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் அருமருந்தாக இந்த முருங்கை கீரை பானம் திகழ்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முருங்கை கீரையை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.இந்த முருங்கை கீரை சாறை கிண்ணத்திற்கு வடிகட்டி எலுமிச்சம் பழத்தை பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.