டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

Photo of author

By Divya

டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

Divya

நாம் தினமும் உலர் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும்.பாதாம் பருப்பைவிட சிறந்த ஊட்டச்சத்து பருப்பு இல்லை.பாதாம் பருப்பை எந்த சீசனிலும் உட்கொள்ளலாம்.பாதாம் சாப்பிட்டால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.

தாதுக்கள்,வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு,புரதம் போன்றவை பாதாமில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தினமும் 30 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பாதாம் ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் ஈ,வைட்டமின் ஏ,நார்ச்சத்து,கால்சியம்,தாமிரம்,மெக்னீசியம்,புரதம் போன்ற சத்துக்கள் உள்ளது.

பாதாம் பருப்பை எப்படி சாப்பிட வேண்டும்?

தினமும் அதிகபட்சம் 8 பாதாம் பருப்பை சாப்பிடலாம்.பாதாம் அப்படியே சாப்பிடாமல் நன்றாக ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடலாம்.பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.இரவு நேரத்தில் ஊறவைத்த பாதாம் அல்லது ஊறவைக்காத பாதாமை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஊறவைத்த பாதாம் சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் தீர பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம்.ஊறவைத்த பாதாம் பருப்பு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஊறவைத்த பாதாம் பருப்பை உட்கொண்டால் சருமம் பளபளப்பாக மாறும்.பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.

ஊறவைத்த பாதாம் பருப்பை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் ஆண்மை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.பாதாம் பருப்பை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரித்து எடை கூடிவிடும்.பாதாம் பருப்பில் லட்டு,ஹல்வா,ஸ்வீட் செய்து சாப்பிடுவதால் உடல் கொழுப்பு அதிகரித்துவிடும்.