சைவம் மற்றும் அசைவ உணவுகளில் சுவையை அதிகரிக்க பூண்டு சேர்க்கப்படுகிறது.இந்த பூண்டு அதிக நன்மைகள் நிறைந்த மூலிகையாகும்.இதில் சல்பர்,அயோடின்,குளோரின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருளாக பார்க்கப்படுகிறது.
பூண்டின் மருந்து குணங்கள்:
பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பூண்டை அரைத்து பற்களை தேய்த்தால் வெண்மையாக மாறும்.
செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம்.சளி இருமல் தொந்தரவு இருந்தால் இரண்டு பூண்டை தட்டி நீரில் கொதிக்க வைத்து பருகலாம்.
தினம் ஒரு பல் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம்.
பூண்டில் அடங்கியுள்ள தீமைகள்:
அளவிற்கு மீறி உணடால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதற்கு ஏற்ப பூண்டு பற்களை அதிகமாக சாப்பிட்டால் உடல் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதிகளவு பூண்டு சாப்பிட்டால் சருமம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்.சரும அரிப்பு,தோல் சிவத்தல் போன்றவை உண்டாகும்.
பச்சை பூண்டை அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.அல்சர்,நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் பச்சை பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பூண்டில் காணப்படும் அல்லிசின் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அதிகப்படுத்தி வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.
உணவில் அதிகளவு பூண்டு சேர்த்தால் வாயுத் தொல்லை,வயிறு வலி,செரிமானப் பிரச்சனை,குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அளவிற்கு அதிகமாக பூண்டு சேர்த்துக் கொண்டால் மூளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.