ஒரே ஒரு உருண்டை சாப்பிட்டால்.. வயிற்றில் உள்ள கெட்ட கேஸ் முழுமையாக வெளியேறும்!!

Photo of author

By Rupa

ஒரே ஒரு உருண்டை சாப்பிட்டால்.. வயிற்றில் உள்ள கெட்ட கேஸ் முழுமையாக வெளியேறும்!!

வயிற்றுப்பகுதியில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கினால் வயிறு உப்பசம்,வாயுத்தொல்லை ஏற்படும்.அடிக்கடி அதிக துர்நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறினால் அவை நமக்கு அசௌகரிய சூழலை ஏற்படுத்தும்.எனவே உடலில் தேங்கி இருக்கின்ற கெட்ட வாயுக்கள் வெளியேற இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)சுக்கு

செய்முறை:-

வாயுத் தொல்லையை போக்க கூடிய அற்புத மருந்து பொடி தயாரிக்க சீரகம் மற்றும் சுக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து சூடேற்றவும்.பிறகு ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.

சீரகம் கருகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நல்ல மணம் வந்த பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும்.பிறகு ஒரு துண்டு சுக்கை சீரகத்தில் சேர்த்து வறுக்க வேண்டும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் வறுத்த பொருட்களை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கிளாஸில் வெந்நீர் ஊற்றி அரைத்த பொடியை கலந்து குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கட்டி பெருங்காயம்
2)அரிசி மாவு

செய்முறை:-

ஒரு கட்டி பெருங்காயத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு போட்டு கொள்ள வேண்டும்.

இப்பொழுது உருட்டி வைத்திருக்கும் பெருங்காய உருண்டைகளை அரிசி மாவில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

இந்த உருண்டைகளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் வற்றில் கேஸ் தேங்குவது தடுக்கப்படும்.