பழைய சோற்றை இப்படி சாப்பிட்டால் அல்சர் பிரச்சனையே இருக்காது!! ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்!!

Photo of author

By Rupa

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.காலை நேரத்தில் நாம் சத்துமிக்க உணவுகள் மற்றும் நீராகாரங்கள் நம்மை நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் காலை நேரத்தில் நீராகாரமாக பழைய சோறை குடித்து வந்தனர்.மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊறவைத்தால் பழைய சோறு என்ற ஊட்டச்சத்து உணவு தயாராகிவிடும்.

இந்த உணவில் சத்தத்தை காட்டிலும் நீரில் தான் அதிக சத்துக்கள் உள்ளது.உலகில் உள்ள உணவுகளிலேயே அதிக ஊட்டச்சத்து நிறைந்த ஒரே உணவு இந்த பழைய சோறு.

நம் ஊர் பகுதியில் பழைய சோற்றை நீச்ச தண்ணீர் என்று கூறும் வழக்கம் உள்ளது.பழைய சோற்றுக்கு சிறந்த காமினேஷன் சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவாடு தான்.சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடுவதால் அதில் ஏரளமான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி ஆரோக்கிய பானமாக மாறிவிடுகிறது.

பழைய சோறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

உடல் சூடு,பித்தப் பிரச்சனை இருப்பவர்கள் காலை நேரத்தில் பழைய சோறு குடிக்கலாம்.இதனால் உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைத்து வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படும்.

தினமும் பழைய சோறு குடிப்பதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.இந்த நீராகாரத்தில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.

அல்சர் உள்ளவர்கள் தினமும் இந்த நீராகாரத்தை குடிக்கலாம்.அல்சர் புண்கள் ஆற,மலச்சிக்கல் தீர பழைய சோறை நீராகாரமாக எடுத்துக் கொள்ளலாம்.குடல் ஆரோக்கியம் மேம்பட,உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பழைய சோறு குடிக்க வேண்டும்.

தினமும் பழைய சோறு குடிப்பதால் உடல் சோர்வு,உடல் எடை குறையும்.இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பழைய சோறு சிறந்த தீர்வாக இருக்கிறது.