இந்த உணவுகள் சாப்பிட்டால்.. சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் ஓடிப்போகும்!!

Photo of author

By Gayathri

உடலில் உறுப்புகளின் முக்கியான ஒரு உறுப்பு சிறுநீரகம்.இது நமது உடலில் நச்சுக் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.

இந்த உறுப்பு செயலிழந்தாலோ அல்லது தொற்றுப்பதிப்புகளை சந்தித்திலோ உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.உடலில் நச்சுக் கழிவுகள் தேங்கி அவை வெளியேறாமல் சிறுநீரக கல்,சிறுநீரக நோய்,சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்பட்டுவிடும்.

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க உணவுமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

சிறுநீரகத்தில் ஏற்படக் கூடிய அனைத்து பாதிப்புகளையும் குணமாக்கும் ஆற்றல் முள்ளங்கிக்கு உண்டு.இதில் வைட்டமின் சி,கால்சியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு அடங்கியிருக்கிறது.

பச்சை காய்கறிகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

இஞ்சி தேநீர்,தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள் சிறுநீரகத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் சிறுநீரகம் ஆரோக்கியம் மேம்படும்.இதில் நார்ச்சத்துக்கள்,தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.