கல்லீரல் ஆரோக்கியம் மோசமடைவதால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.மஞ்சள் காமாலை ஏற்பட்டால் கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.அதேபோல் மஞ்சள் காமாலையால் தோல் நிறம் மாறும்.மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு தீவிரமானால் உயிரிழப்பு ஏற்படும்.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-
1)உடல் பலவீனம்
2)பசியின்மை
3)உடல் சோர்வு
4)மஞ்சள் நிற சிறுநீர்
5)கண்கள் நிறம் மஞ்சளாக இருத்தல்
6)வெளிர் மலம்
மஞ்சள் காமாலை குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்:
இந்நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆப்பிள்,ஆரஞ்சு,பப்பாளி போன்ற பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.கேரட்,பீட்ரூட் போன்ற காய்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.கோழி இறைச்சி,மீன் ஆகியவற்றில் புரதம் அதிகமாக நிறைந்திருக்கிறது.பழுப்பு அரிசி உணவுகள்,ஓட்ஸ் உணவுகளை உட்கொண்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மது பழக்கத்தை கைவிட வேண்டும்.பதப்படுத்தப்பட்ட இறைச்சி,மீன் உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.ஆல்கஹால் உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.