நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவு பல நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது.குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இன்று இரத்த அழுத்தப் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.உணவுகள் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பை ககட்டுக்குள் வைக்கலாம்.
1)கீரை
போலிக் அமிலம் நிறைந்த கீரைகளை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கீரையில் இருக்கின்ற பொட்டாசியம்,மெக்னீசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
2)வாழைப்பழம்
பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழத்தை உட்கொண்டால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3)ஓட்ஸ்
இரத்த அழுத்தம் கட்டுப்பட ஓட்ஸை தினமும் உணவாக சாப்பிடலாம்.ஓட்ஸில் பீட்டா குளுக்கன் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஓட்ஸை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
4)பூண்டு
உங்கள் இரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் பூண்டு சாப்பிட வேண்டும்.பூண்டு தேநீர்,பூண்டு சாறு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
5)தயிர்
தினமும் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.அதேபோல் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
6)மாதுளை
பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் மாதுளையை அரைத்து பருகி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
7)பீட்ரூட்
தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு பருகினால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்கு வரும்.