மோரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்!!

Photo of author

By Divya

மோரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்!!

ஆசனவாய் பகுதியில் வரக் கூடிய மூல நோயால் மலம் கழிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும்.மலத்தோடு இரத்த கசிவு, எரிச்சல், வலி ஏற்படும்.இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)சின்ன வெங்காயம்
3)மாங்கொட்டை பருப்பு

செய்முறை:-

மாங்கொட்டை பருப்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு தேவையான அளவு வாங்கி வந்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அல்லது மாங்கொட்டை பொடி விற்கும் 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

பிறகு 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

ஒரு கிளாஸ் பசு பாலில் தயாரிக்கப்பட்ட மோரில் 1 தேக்கரண்டி மாங்கொட்டை பருப்பு பொடி மற்றும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு கலக்கி குடிக்கவும்.இந்த மோரை காலை நேரத்தில் குடிப்பதினால் பைல்ஸ் நோய்க்கு சில தினங்களில் தீர்வு காண முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)இஞ்சி
3)எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் மோரில் 1 தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.