நம் ஊரில் கிடைக்க கூடிய விலை மலிவு பழமான கொய்யா மூல நோய்க்கு அருமருந்தாக உள்ளது.கொய்யாவில் பழம் வெள்ளை மற்றும் சிவப்பு கொய்யா என இரு வகைகள் இருக்கிறது.இந்த பழம் அதிக இனிப்பு சுவை கொண்டவையாகும்.
கொய்யா பழத்தில் நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு,வைட்டமின் ஏ,பி,சி,மாவுச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த கொய்யா பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மருத்துவ நன்மைகள் அதிகளவு கிடைக்கும்.
கொய்யா பழத்தை ஜூஸாக அரைத்து காலை நேரத்தில் குடித்து வந்தால் பைல்ஸ்(மூலம்) புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து மலசிக்கல் பைல்ஸ் போன்ற பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையே பைல்ஸாக மாறுகிறது.
மேலும் தைராய்டு,சர்க்கரை போன்ற பாதிப்புகள் குணமாக கொய்யா பழம் சாப்பிடலாம்.தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
கொய்யா பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.அது மட்டுமின்றி உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது.கொய்யா பழம் எளிதில் கிடைப்பதால் அதன் மகிமை தெரியாமல் பலரும் அலட்சியம் கொள்கின்றனர்.விலை உயர்ந்த ஆப்பிளை ஒப்பிடுகையில் கொய்யா பழம் அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.
இனியாவது கொய்யா பழத்தைகொய்யா பழத்தை அலட்சியப்படுத்தாமல் தினமும் ஒன்று சாப்பிட்டு உடலில் உள்ள நோய்களை குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.