செவ்வாழைப்பழத்தில் வைட்டமின்கள்,கால்சியம்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இந்த செவ்வாழைப்பழம்நம் உடலில் இருக்கின்ற பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
செவ்வாழைப்பழத்தை பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.குழந்தையின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் செவ்வாழைப்பழத்தை சாப்பிடலாம்.செவ்வாழைப்பழத்தில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)செவ்வாழைப்பழம் – ஒன்று
2)தேன் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு செவ்வாழைப்பழத்தை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த செவ்வாழைப்பழத்தில் தேன் ஊற்றி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் சீக்கிரம் உண்டாக சாப்பிட வேண்டிய ரெமிடி இது.
செவ்வாழைப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.செவ்வாழைப்பழ மில்க் ஷேக்,செய்து சாப்பிட்டு வந்தால் வந்து உற்பத்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)செவ்வாழைப்பழம் – ஒன்று
2)பேரிச்சம் பழம் – இரண்டு
3)முந்திரி பருப்பு – இரண்டு
4)பாதாம் பருப்பு – இரண்டு
5)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
மந்திரி பருப்பு,பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு செவ்வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி அதில் போட வேண்டும்.இதில் ஒரு கப் பசும் பால் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.
இந்த பாலை தினமும் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.