உங்கள் அல்சர் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.
வாழைப்பழம்
தேங்காய் பாலில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.
தேங்காய் பால்
ஒரு தேங்காயை உடைத்து அதன் பருப்பை தனியாக கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும்.
பாதாம் பிசின்
குளிர்ச்சி தன்மை நிறைந்த பாதாம் பிசின் பாதாம் மரத்தில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருளாகும்.இந்த பாதாம் பிசின் பல நன்மைகளை கொண்டுள்ள மருத்துவ பொருளாகும்.இந்த பாதாம் பிசினை தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து பாதாம் பிசின் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.பின்னர் இந்த பிசினை ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் கலந்து குடித்தால் அல்சர் புண்கள் குணமாகும்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை தனியாக எடுக்க வேண்டும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஐந்துமுறை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இந்த ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இந்த கற்றாழை ஜூஸை உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரமாக குணமாகும்.
மணத்தக்காளி ஜூஸ்
வயிற்றுப்புண்களுக்கு நல்ல தீர்வாக மணத்தக்காளி கீரை உள்ளது.இந்த கீரையை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மணத்தக்காளி கீரை ஜூஸை வடிகட்டி பருகி வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.மணத்தக்காளி கீரையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.