உடலில் பித்தம் அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.இந்த மஞ்சள் காமாலையை அலட்சியமாக கருதி குணப்படுத்திக் கொள்ள தவறினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-
1)உடல் சோர்வு
2)சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்
3)குமட்டல்
4)பசியின்மை
5)வாந்தி உணர்வு
6)தோல் அரிப்பு
மஞ்சள் காமாலைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ:-
*கீழாநெல்லி வேர் – கால் கைப்பிடி
*கீழாநெல்லி இலை கைப்பிடி
முதலில் கீழாநெல்லி வேர் மற்றும் கீழாநெல்லி இலை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இதை கல்வம் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பால் அல்லது மோரில் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை மூன்று தினங்களில் குணமாகிவிடும்.
*சுரைக்காய் இலை – இரண்டு
*தண்ணீர் – ஒரு கிளாஸ்
*சர்க்கரை – சிறிதளவு
முதலில் சுரைக்காய் இலையை தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இந்த சுரைக்காய் இலை சாறை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு சீக்கிரம் குணமாகும்.
*வேப்பங் கொழுந்து – சிறிதளவு
*வேப்பிலை – ஒரு கொத்து
*ஓமம் – ஒரு தேக்கரண்டி
*உப்பு – சிறிதளவு
முதலில் நீங்கள் வெப்பமங்கொழுந்து மற்றும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி ஓமத்தை போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து பருகி வந்தால் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும்.
அதேபோல் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மோர்,சின்ன வெங்காயம்,இளநீர்,வெள்ளரி,மொந்தன் வாழை,தர்பூசணி,மாதுளை உள்ளிட்டவற்றை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.பித்தத்தை குறைக்கும் உணவுகளை தினசரி சாப்பிட வேண்டும்.