நாம் தினமும் ஒரு பழம் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.விலை அதிகம் இருக்கின்ற பழங்களைவிட விலை குறைவான பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக கொய்யா பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி,மெக்னீசியம்,கால்சியம்,வைட்டமின் பி6,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கொய்யா பழம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடலாம்.கொய்யா பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.இரத்த அழுத்தம் குணமாக கொய்யா பழம் சாப்பிடலாம்.
சளி,இருமல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டால் விடுதலை கிடைக்கும்.தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் இருக்கின்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற கொய்யா பழம் சாப்பிடலாம்.
உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைய வைக்க கொய்யா பழத்தை சாப்பிடலாம்.கொய்யா பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.கொய்யா பழத்தை சாப்பிட்டால் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.கொய்யா பழத்தை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
கொய்யா பழம் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுறது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடலாம்.