பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.உணவுமுறை மாற்றத்தால் உடல் எலும்புகள் வலுவிழந்து இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது.இந்த மூட்டு வலிக்கு இயற்கை வழியில் தீர்வு காண நினைப்பவர்கள் வாதநாராயணன் இலையை வைத்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள்:
1)வாத நாராயண கீரை – 1 கப்
2)ராகி மாவு – 1 கப்
3)பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
4)மிளகு – 1/2 தேக்கரண்டி
5)சீரகம் – 1/2 தேக்கரண்டி
6)வெங்காயம் – 1/2 கப்
7)பெருங்காயத்தூள்- 1/4 தேக்கரண்டி
8)உப்பு – தேவையான அளவு
9)நல்லெண்ணெய் – தேவையான அளவு
10)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி
11)கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு கப் கீரையை தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து கடுகு,உளுந்து பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு பொரிய விடவும்.
அடுத்து 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி எடுக்கவும்.பிறகு
நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வாத நாராயணன் கீரையை போட்டு குறைவான தீயில் வதக்கி எடுக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் வதக்கிய கலவையை போட்டு கலந்து விடவும்.பிறகு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.அதன்பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து சூடாக்கவும்.
பிறகு அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை தட்டி தோசைக் கல்லில் போட்டுக் கொள்ளவும்.பிறகு இருபுறமும் திருப்பி திருப்பி வேகவிடவும்.இவ்வாறு ஒவ்வொரு உருண்டைகளாக தட்டி அடை செய்து கொள்ளவும்.இந்த வாதநாராயணன் கீரை அடையை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி,முழங்கால் வலி,மூட்டு வீக்கம்,மூட்டு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.