நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் கீழ்கண்ட வீட்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
நீரிழிவு நோய் அறிகுறிகள்:
*அடிக்கடி பசி ஏற்படுதல்
*திடீர் உடல் எடை குறைவு
*அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
*உடல் சோர்வு
*கண் பார்வை குறைபாடு
*அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல்
*அடிக்கடி மயக்கம் ஏற்படுதல்
தேவைப்படும் பொருட்கள்:
1)சிலுங்கி பொடி – ஒரு தேக்கரண்டி
2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்
தயாரிக்கும் முறை:
ஸ்டெப் 01:
நாட்டு மருந்து கடையில் சிலுங்கி பொடியை தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இல்லையேல் சிலுங்கி சிலுங்கி இலையை வெயிலில் நன்றாக காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
கருப்பு மிளகு விதை அரை தேக்கரண்டி அளவு எடுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.உரல் இல்லையென்றால் மிக்சர் ஜாரில் மிளகை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
பிறகு பாத்திரம் ஒன்றில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பின்னர் ஒரு தேக்கரண்டி சிலுங்கி பொடியை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 04:
அதன் பிறகு அரைத்து வைத்துள்ள கருப்பு மிளகு பொடியை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஸ்டெப் 05:
பிறகு இந்த பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.தொடர்ந்து 30 தினங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் பருகி வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)அக்ரூட் பருப்பு – 10
2)பாதாம் பருப்பு – 10
3)முந்திரி பருப்பு – 10
தயாரிக்கும் முறை:-
ஸ்டெப் 01:
முதலில் அக்ரூட் பருப்பு,பாதாம் பருப்பு மாற்றும் முந்திரி பருப்பை நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு இதை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து இந்த பருப்பை கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் சேர்த்து நன்றாக சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்த பொடியை பாலில் கொட்டி நன்கு கலந்து பருகினால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.