மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

Photo of author

By Divya

மிளகுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சிக்கு நிமிடத்தில் தீர்வு எட்டும்!!

Divya

சில நேரம் தொண்டை சதை வளர்ச்சி அடைந்தால் தொடர் இருமல்,தொண்டை பகுதியில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதை உள்நாக்கு வளர்ச்சி என்று சொல்வார்கள்.இந்த உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலனை சில மணி நேரத்தில் காணலாம்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – ஐந்து
2)சுக்கு – சிறிய துண்டு
திப்பிலி – இரண்டு
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பொடி – கால் தேக்கரண்டி
கற்பூரவல்லி இலை – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் மிளகு,சுக்கு,திப்பிலி,மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை பொடி மற்றும் கற்பூரவல்லி இலை பொடியை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிதளவு சூடானதும் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி காலை மாலை என இரு நேரமும் பருகி வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குறையும்.இந்த நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குறைவதோடு தொண்டை அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு கலந்து தொண்டையில் படும்படி குடித்தால் உள்நாக்கு வளர்ச்சி கட்டுப்படும்.அதுபோல் ஒரு துண்டு புளியை உள்நாக்கில் படும்படி சாப்பிட்டால் அதன் வளர்ச்சி குறையும்.