நம் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது உணவுமுறை பழக்கம்தான்.இப்பொழுது நாம் சாப்பிடும் உணவுகளில் ஆரோக்கியத்தை தேடி கண்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
சர்க்கரை நோய் வந்தால் ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து போய்விடுவார்கள்.சர்க்கரை நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள்:
1)தினமும் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
2)பழுப்பு அரிசி,கோதுமை உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
3)கேரட்,கொத்து அவரை,கோவைக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.
4)உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆளிவிதை,சியா விதை,பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.
5)பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.
6)பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை தவிர்க்க வேண்டும்.இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
7)பாதாம் பருப்பு,வால்நட்,பிஸ்தா போன்ற உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
8)உடல் உழைப்பு இருக்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.