அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிட்டால் கட்டாயம் இந்த பிரச்சனை வரும்!! முட்டை பிரியர்களே அலார்ட்!!

Photo of author

By Rupa

அதிக புரதம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை.வளரும் குழந்தைகள் தினந்தோறும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவரின் அறிவுரை.நாம் சாப்பிடும் கோழி முட்டையில் இருந்து கொழுப்புச்சத்து,கலோரிகள்,புரதச்சத்து,வைட்டமின்கள்,இரும்பு,துத்தநாகம்,காப்பர்,அயோடின்,செலினியம் போன்ற சத்துக்கள் கிடைக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க,கண் சார்ந்த பிரச்சனை சரியாக முட்டையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.முட்டையில் இருக்கின்ற போலிக் அமிலம் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி உதவுகிறது.

அதிக உடல் எடை கொண்டவர்கள்,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள்,இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.என்னதான் முட்டை அதிக ஊட்டச்சத்து கொண்ட பொருள் என்றாலும் அளவாக உட்கொள்வதே நல்லது.சிலர் அதிகளவு முட்டை சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.இது உடலில் பக்கவிளைவை ஏற்படுத்தும்.

அதிக முட்டை சாப்பிடுவதால் உண்டாகும் பக்கவிளைவுகள்:

1)நீங்கள் அதிகளவு முட்டை உணவு எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படக்கூடும்.

2)இரவு நேரத்தில் அதிக முட்டை சாப்பிட்டால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிற்று வலி ஏற்படும்.

3)நீங்கள் தொடர்ந்து அளவிற்கு அதிகமாக முட்டை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் இரைப்பை குடல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

4)சிலருக்கு அளவிற்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.வயிறு எரிச்சல்,தோல் அலர்ஜி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

5)ஒரே நேரத்தில் அளவிற்கு அதிகமாக முட்டை சாப்பிட்டால் குமட்டல்,வாந்தி,வயிற்று வலி,கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படும்.