கண்ணை கவரும் மஞ்சள்நிற பழமான பப்பாளி சுவை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பழமாகும்.இந்த பப்பாளி பழம் வயிறுப் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.
குடல் கழிவுகளை துடைத்து வெளியேற்ற பப்பாளி துண்டுகளை காலை நேரம் சாப்பிடுங்கள்.பப்பாளி பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.ஆண்மை பிரச்சனையை சரி செய்ய பப்பாளி பழம் சாப்பிடலாம்.
வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்பு இருப்பவர்கள் பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இத்தனை நன்மைகள் நிறைந்து காணப்படும் பப்பாளி பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
பப்பாளி பழத்தை அளவு கடந்து சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள்:
1)காலை நேரத்தில் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகிவிடும்.வயிறு வீக்கம்,வயிறு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
2)இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிக பப்பாளி பழம் சாப்பிட்டால் இதயத் துடிப்பு அதிகமாகிவிடும்.
3)பப்பாளி பழத்தை தோல் நீக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள நச்சுக் கழிவுகள் குடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.
4)கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5)குறைந்த சர்க்கரை இருப்பவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனை உள்ள பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும்.
6)அதிகளவு பப்பாளி பழம் சாப்பிட்டால் தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,குமட்டல்,பருக்கள் வருதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே பப்பாளி பழம் நல்லது என்று நினைத்து அதிகமாக எடுத்துக் கொள்வதை இனி தவிருங்கள்.