உங்க அக்கவுண்ட்ல ரூ.3000 வந்தாச்சா!! உடனே இதை செக் பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

உங்க அக்கவுண்ட்ல ரூ.3000 வந்தாச்சா!! உடனே இதை செக் பண்ணுங்க!!

Gayathri

தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தமிழக அரசின் உடைய நலத்திட்டங்களில் பலர் பலன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்திற்கான 3000 ரூபாயை பெறுவதற்கு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். 

 

✓ மகளிர் உரிமைத் தொகை :-

 

ஒவ்வொரு மாதமும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினுடைய விரிவாக்கமாக தற்பொழுது முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு உதவித்தொகை, கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு உதவி தொகை, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு உதவித்தொகை, புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு திருமண உதவி தொகை என விரிவாக்கத்தோடு பலர் உரிமை தொகையை பெற்று வருகின்றனர்.

 

✓ தமிழ் புதல்வன் திட்டம் :-

 

தமிழ் புதுமைப்பெண் திட்டத்தைப் போல அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

✓ புதுமைப்பெண் திட்டம் :-

 

திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் படிக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பாக ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உதவி தொகை வந்து வருகிறது.

 

உங்களுடைய வீட்டில் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய், செல்லக்கூடிய ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு உதவி தொகையாக 2000 ரூபாய் என இந்த மாதத்திற்கான 3000 ரூபாய் பெற வேண்டும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.