அந்த பக்கம் போனா இந்த கடைக்கு போங்க!! எல்லாம் இலவசம் இணையத்தில் வேகமாக பரவும் கடை விளம்பரம்!!

0
62
If you go to that page, go to this store!! Everything is free and the fastest growing shop ad on the internet!!
If you go to that page, go to this store!! Everything is free and the fastest growing shop ad on the internet!!

அந்த பக்கம் போனா இந்த கடைக்கு போங்க!! எல்லாம் இலவசம் இணையத்தில் வேகமாக பரவும் கடை விளம்பரம்!!

தற்போதெல்லாம்  கடை உரிமையாளர்கள் கடையை தெரியபடுத்த  பல வேடிக்கையான விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் இது வாங்குனா  இது இலவசம் என்றும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இது போன்ற ஒரு வேடிக்கையான நிகழ்வு சங்ககிரி பகுதியில் நடத்துள்ளது. இந்த  வேடிக்கையான விளம்பரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளத்தில்  இது போன்ற நிகழ்வுகள்  அடிக்கடி வெளிவந்து வைரலாகுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிகழ்வு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் நடத்துள்ளது. மேலும அந்த காபி கடை முன்பு வைக்கப்பட்ட  போர்டு இணையத்தில் பரவிவருகிறது.

அந்த போர்டில்  பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இலவசம், 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு டீ இலவசம் மற்றும் துய்மை பணியாளருக்கு டீ இலவசம் என்று அந்த கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த போர்டின் புகைப்படத்தை  இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் அவரை பாராட்டியும், எல்லோரும் காசு சேர்க்கிறார்கள் ஆனால் இவர் மட்டும் புண்ணியத்தை சேர்க்கிறார் என்றும் தங்களின்  கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பலர் கடை உரிமையாளரை பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

author avatar
Jeevitha